"தம்பி ஒரு நிமிஷம்... என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளையாக தேடிகிட்டு இருக்கேன். அதுக்காக சில கேள்விகள்"
"கேளுங்க"
"உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா?"
"இல்லை"
"குடிப்பழக்கம் உண்டா..?"
"சத்தியமா இல்லை"
"சீட்டாட்டம், குதிரை ரேஸ் பழக்கம் உண்டா..?"
"அய்யய்யோ கிடையவே கிடையாது"
"வேறு பெண்களுடன் தொடர்பு உண்டா..?"
"அய்யோ..அது பற்றியே எனக்கு தெரியாது"
"ரொம்ப நல்லவரா இருக்கீங்களே. உங்களுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாதா?"
"ஒரே ஒரு கெட்ட பழக்கம் உண்டு".
"என்ன அது..?"
"நிறைய பொய் சொல்லுவேன்"
மனைவி: ஏன் இன்னிக்கு அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்துட்டீங்க?
கணவன்: இன்னிக்கு என் அலுவலகத்தில் ஒரு தவறு பண்ணிட்டேன். என் மேலாளர் "நரகத்திற்கு போய்த்தொலை"
என்றார். அதனால்தான்
உங்களுக்கு ஒரு கணக்குப் பரீட்சை.
ஆலமர இலை 10, அரச மர இலை 13, வேப்ப மர இலை 16, கூட்டினால் என்ன வரும்?
என்னங்க தெரியலையா?
அய்யோ.. அய்யோ... இதுகூட தெரியலையா? குப்பைதான் வரும். ஹா..ஹா..ஹா