Sunday, September 23, 2007

பிரதோஷ வழிபாடு செய்யுங்கள்!

பிரதோஷத்தின் போது வழிபாடு செய்தால் வறுமை,பயம், பாவம், மரண வேதனை இவைகள் எல்லாம் விலகும். நன்மைகள் பலவிளையும். இது கடம்பவன புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பிரதோஷ நேரம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை உள்ள காலம். வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.

சனிக்கிழமை பிரதோஷம் வந்தால் மிகச் சிறப்பு. சனிப்பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்குமாம்.

பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் நலம்.

பிரதோஷத்தன்று ரிஷபதேவரின் இரண்டு கொம்புகளுக்கிடையே சிவலிங்கத்தை கண்டு வணஙகினால் நன்மை பயக்கும்.

(மூலம் - வெப்துனியா)