ஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்
"பார்க்க படுகேவலமாக இருக்கும் இதை தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா?"
பதில் வருகிறது"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி
`````````````````````````````````````````````````````
சர்தார்: (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து.
பணியாள்: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி ஜி.
சர்தார்: அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ
````````````````````````````````````````````````````````````````````
சர்தார்: நேற்று ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.
நண்பர்: ஏன்?
சர்தார்: மேல் பர்த் தான் கிடைத்தது
நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாற்றிக் கொண்டிருக்கலாமே?
சர்தார்: செஞ்சிருக்கலாம். ஆனா கீழே யாரும் இல்லே
``````````````````````````````````````````````````````
சோகமே உருவாக உட்கார்ந்திருந்த பந்தா சிங்கிடம் அவருடைய நன்பர் அருகில் வந்தமர்ந்து, ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்டார். அதற்க்கு பந்தா சிங், தான் பந்தயத்தில் ரூ.800 தோற்று விட்டதாக சொன்னார். நன்பர் எப்படி 800 ரூபாயை தொலைத்தாய் என்றதற்க்கு சர்தார் பந்தா சிங் சொன்னார்,
"நேற்று நடந்த இந்திய-இலங்கை கிரிகெட் மேட்ச்சில் இந்தியா ஜெயிக்கும் என ரூபாய் 400 பந்தயம் கட்டினேன், ஆனால் இந்தியா தோற்று போய் விட்டது.." என்றார்.
நன்பர், "சரி மீதி ரூ.400 எப்படி தொலைந்தது?" என்றதற்க்கு பந்தா சிங் சொன்னார், "அன்றிரவு பார்த்த ஹை-லைட்ட்¢லும் பந்தயம் கட்டினேனே.." என்றார்.